'அகழ்' - ஒக்டோபர் 2021
மக்களிடம் அதிகளவில் புத்தகங்கள் செல்வதால் மட்டும் சமூகப் புரட்சி ஏற்பட்டு விடாது: தக்ஷிலா ஸ்வர்ணமாலி உரையாடியவர்: டில்ஷானி சத்துரிக்கா தாபரே - தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா தக்சிலா ஸ்வர்ணமாலி கவிதைகள், நாவல், சிறுகதைகள், சமூக விஞ்ஞான ஆய்வுகள் போன்ற பல்வேறுபட்ட படைப்புகளினூடாக தனது அடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு, அரசியற் பார்வையுடன் படைப்பாக்கத்தில் ஈடுபடும் ஒருவர். ‘அக்கலட்ட ஆக்கலட்ட அகுலட்ட’, ‘கெலு லே லூ விலவுன் பஹாலும’ ஆகிய கவிதை தொகுதிகள், ‘சங்வேகபிராப்த பெம்வத்துன் ஹரித்தரெஸ் கவுளுவட்ட அவசன் புஹுமன் புதா கெமிதுலென் நிக்முன த’ சிறுகதைத் தொகுதி மற்றும் ‘பீடி’ நாவல் ஆகியன அண்மைக்காலத்தில் அவரால் வெளியிடப்பட்ட நான்கு இலக்கியப் படைப்புகளாகும். ‘பீடி’ நாவல் பற்றியும், தற்கால சமூக அரசியல் பின்னணி பற்றியும் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் சுருக்கமான பதிவு கீழே தரப்படுகின்றது. பீடி நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் ஆதிரை வெளியீடாக வரவிருக்கின்றது. ஆ சிரியர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும், அப்போராட்டங்களில் உத்வேகத்துடன் பங்களி...