Posts

Showing posts from August, 2021

'அகழ்' - ஏப்ரல் 2021

Image
  உரையாடியவர் அனோஜன் பாலகிருஷ்ணன் - மொழிபெயர்ப்பு பிரியதர்ஷினி சிவராஜா இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். இவருடைய பத்துச் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. அவருடனான மின்னஞ்சல் உரையாடல் இது. நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல் எத்தகைய இலக்கிய பின்புலம் கொண்டது? 1961ம் ஆண்டு பல்கலைக்கழப் பட்டத்தினைப் பெற்ற, சிங்கள பாடத்தினைக் கற்பித்த அனுபவம் வாய்ந்த ஓர் பாடசாலை ஆசிரியராக எனது தந்தையார் விளங்கினார். அவரிடம் பெருமளவு புத்தகத் தொகுதிகள் இருந்தன. சிறு வயதில் நான் அவற்றை வாசித்து விளங்கிக் கொள்ள முயற்சித்தேன்.  எனது தந்தையார் சம்பிரதாயபூர்வமான இலக்கிய மரபுகளை நிராகரித்த, நவீன இலக்கியத்தினை மதித்த ஒருவர். பாடசாலையில் 13வது தரம் வரை 5 ஆண்டுகளாக  சிங்கள இலக்கியப் பாடத்தினை எனக்கு கற்றுத் தந்த ஆசிரியராக அவர்  விளங்கினார். எனது வாழ்வின் ஆரம்ப கட்டங்களில், எனது இலக்கிய சூழல